மலையாள நடிகர் நெடும்பராம் கோபி காலமானார்

மலையாள நடிகர் நெடும்பராம் கோபி காலமானார்

பிரபல மலையாள நடிகர் நெடும்பராம் கோபி காலமானார். அவருக்கு வயது 85.

கேரள மாநிலம் திருவில்லாவைச் சேர்ந்த நெடும்பராம் கோபி, பிளஸ்சி இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ’காழ்ச்சா’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில், மம்மூட்டிக்குத் தாத்தாவாக அவர் நடித்திருந்தார்.

பிறகு காவ்யா மாதவனின் ஷீலாபதி, சுரேஷ் கோபியின் அஸ்வரூடன், ஆஃப் த பியூப்பிள், ஃபோர் த பியூப்பிள் உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக அலிஃப் என்ற படத்தில் நடித்திருந்தார். சின்னத்திரை தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த கோபியின் மனைவி கமலாம்மா ஓய்வு பெற்ற தலைமையாசிரியை. இவர்களுக்கு சுனில் ஜி.நாத் என்ற மகனும் சுனிதா, சுபிதா என்ற மகள்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in