60 வயதில் 44 வயது நடிகையை 4வது திருமணம் செய்த நடிகர்... முன்னாள் கணவர் சொன்ன அதிர்ச்சி காரணம்!

நரேஷ் பாபு பவித்ரா
நரேஷ் பாபு பவித்ரா

தன்னுடைய 60ஆவது வயதில் 44 வயது நடிகையை திருமணம் செய்துள்ளார் தெலுங்கு நடிகர் நரேஷ் பாபு. இந்தத் திருமணம் பற்றி அந்த நடிகையின் முன்னாள் கணவர் அதிர்ச்சி காரணம் தெரிவித்துள்ளார்.

நரேஷ் பாபு பவித்ரா
நரேஷ் பாபு பவித்ரா

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது சகோதரர்தான் நரேஷ் பாபு. இவருக்கு இப்போது 60 வயதாகிறது. இந்த வயதில் இவர் நான்காவது திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இவர் 44 வயதாகும் நடிகை பவித்ரா லோகேஷை மணம் புரிந்திருக்கிறார். தெலுங்கு, இந்தியில் நடித்தது மட்டுமல்லாது தமிழில் ’பொருத்தம்’, ’நெஞ்சத்தை அள்ளித்தா’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் நரேஷ் பாபு.

நரேஷ் பாபு மூத்த நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின் மகளை முதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நவீன் விஜயகிருஷ்ணா என்ற மகன் இருக்கிறார். பிரச்சினை காரணமாக இவரை விவாகரத்து செய்துவிட்டு, அடுத்து ரேகா சுப்ரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேஜா என்ற மகன் இருக்கிறார். ஆனால் இவரையும் விவாகரத்து செய்துவிட்டு, தனது ஐம்பதாவது வயதில் ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர் நரேஷ் பாபுவை விட 20 வயது குறைவானவர். ரம்யாவுக்கும், நரேஷுக்கும் ஒரு மகன் இருக்கிறார். ஆனால் நரேஷ் பாபு இவரையும் விவாகரத்து செய்தார்.

ம்கேஷ்பாபு நரேஷ்பாபு பவித்ரா
ம்கேஷ்பாபு நரேஷ்பாபு பவித்ரா

இப்படி மூன்று திருமண உறவும் தோல்வியில் முடிந்தாலும் தனது அறுபதாவது வயதில் நான்காவது திருமணம் முடித்துள்ளார் நரேஷ் பாபு. கடந்த சில மாதங்களாகவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நரேஷ் பாபு- பவித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். பவித்ராவுக்கு இது இரண்டாவது திருமணம்.

இந்தத் திருமணம் குறித்து பவித்ராவின் முன்னாள் கணவர் பிரசாத், “பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்பக் கூடியவர். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். நரேஷ் பாபுவுக்கு ரூ. 1500 கோடி சொத்து இருக்கிறது என்பதாலேயே அவரைத் திருமணம் செய்துள்ளார்” எனக் கூறி அதிர்ச்சிக் கொடுத்துள்ளார். பவித்ரா- பிரசாத் ஜோடிக்கு ஒரு மகன் இருக்கிறார்.

இதேபோல, நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா, நரேஷ் பாபுவுக்கு பல பெண்களோடு தொடர்பு இருந்ததாகவும் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தினால் சொத்தின் உரிமையில் இருந்து மனைவி பெயரை நீக்கிவிடுவேன் என அவர் மிரட்டியதாகவும் புகார் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in