நடிகர் நானியின் ‘தசரா’ திரைப்பட டீசர் வெளியீடு!

நடிகர் நானியின் ‘தசரா’ திரைப்பட டீசர் வெளியீடு!

நடிகர் நானியின் ‘தசரா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் நானியின் அடுத்தத் திரைப்படம் ‘தசரா’. பான் இந்தியா படமாக உருவாகி இருக்கிறது. ரத்தமும் சதையுமாக ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் ’தசரா’ படத்தின் டீசரை, இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர்.

தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தசரா திருவிழா, இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பது ஒரு பகுதி. இந்த 'தசரா' திரைப்படம் தீமைக்கெதிரான நன்மையின் வெற்றியை சித்தரிக்கும். நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தை ’தசரா’ திரைப்படம் காட்சிப்படுத்துகிறது. முதல் பிரேமில் தரணி (நானி) ஒரு பெரிய ராவணன் சிலைக்கு முன்னால் நிற்பது காட்டப்படுகிறது. தெலுங்கானாவின் கோதாவரிக்கானி சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள வீரலப்பள்ளி கிராமத்தில் நடக்கும் கதை. சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள மக்கள் கஷ்டத்தை மறக்க மது அருந்துவது வழக்கம். அந்த மக்களின் வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. அங்கு வாழும் தரணியின் உலகம் மிகவும் காட்டுத்தனமானது. சில தீய சக்திகள் கிராமத்தில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் போது தரணியின் கோபம் பொங்கி எழுகிறது.

அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ’தசரா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in