மாலத்தீவு பயணத்தை அதிரடியாக ரத்து செய்த நடிகர் நாகர்ஜூனா...காரணம் இதுதான்!

நாகர்ஜூனா...
நாகர்ஜூனா...

நடிகர் நாகர்ஜூனா தனது மாலத்தீவு பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி லட்சத்தீவுகளுக்கு பயணம் செய்து, அங்கிருந்து புகைப்படங்களை பகிர்ந்தார். இதனைக் கண்டு, சுற்றுலாவை மிகப் பெரும் அளவில் நம்பி இருந்த மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது. மேலும், மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து சொல்லினர். இதனால் மாலத்தீவுகளுக்கான பயணத்தை புறக்கணிப்போம் என பல திரைப்பிரபலங்களும் மோடி தொண்டர்களும் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் நாகார்ஜூனாவும் தனது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்திருப்பதாவது, "பிக் பாஸ்7' நிகழ்ச்சி மற்றும் 'நா சாமி ரங்கா' படத்திற்காக கடந்த 75 நாட்கள் இடைவேளையின்றி உழைத்தேன். அதற்காக குடும்பத்துடன் ஓய்வெடுக்க மாலத்தீவு போக இருந்தேன். ஆனால் இப்போது அந்தப் பயணத்தை த்து செய்துவிட்டேன். அடுத்த வாரம் லட்சத்தீவு செல்ல உள்ளேன். இதற்குக் காரணம் பயோமோ, பயத்தினாலோ, வேறு காரணங்களோ இல்லை. நமது பிரதமரை அவர்கள் தவறாக பேசியுள்ளார். அது நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாது. அவர் 1.5 பில்லியன் மக்களை வழிநடத்தி தலைவராக உள்ளார். அவரை பற்றி பேசி மாலத்தீவு பின்விளைவுகளை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை இருக்கிறது" என்றார் அவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in