உடல்நலக்குறைவால் நடிகர் 'மாயி' சுந்தர் மரணம்

நடிகர் 'மாயி' சுந்தர்
நடிகர் 'மாயி' சுந்தர்

'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்பட புகழ் நடிகர் 'மாயி' சுந்தர் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 50.

மன்னார்குடியைச் சேர்ந்த நடிகர் 'மாயி' சுந்தர், ' மாயி', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'வெண்ணிலா கபடிக்குழு', 'குள்ளநரி கூட்டம்', 'மிளகாய்', 'சிலுக்குவார் பட்டி சிங்கம்', 'கட்டா குஸ்தி', 'கட்சிக்காரன்' என ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட 'மாயி' சுந்தர் இதற்கான சிகிச்சையை அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்குத் திருமணமாகவில்லை. 'மாயி' சுந்தர் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'மாயி' சுந்தரின் இறுதிச்சடங்கு மன்னார்குடியில் இன்று நடைபெறும் என்று தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in