இந்த ரோலுக்கா இவ்வளவு பெரிய பில்டப்? - லோகேஷ் கனகராஜை வெளுத்து வாங்கும் மன்சூர் அலிகான்!

லோகேஷ் கனகராஜூடன் மன்சூர்...
லோகேஷ் கனகராஜூடன் மன்சூர்...

நடிகர் மன்சூர் அலிகான் லோகேஷ் கனகராஜூக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான். 'கைதி' படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் முதலில் கதை எழுதி உள்ளார் லோகேஷ். அந்த சமயத்தில் மன்சூர் அலிகான் கைதாகி நிஜமாகவே சிறை சென்றதால் அவரால் கைதி படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் அவருக்கு 'லியோ' படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். 'லியோ' படத்தின் இரண்டாம் பாதியில் மன்சூர் அலிகான், லியோ தாஸ் பற்றி சொல்லுவது தான் அப்படத்தில் பல்வேறு டுவிஸ்ட்டுகளுக்கு உதவி இருக்கும். ஆனாலும் மன்சூர் அலிகானுக்கு பெரிய கதாபாத்திரமாக இப்படத்தில் வழங்கப்படவில்லை. இதைக் குறிப்பிட்டுதான் மன்சூர் அலிகான் தற்போது பேசியுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான்...
நடிகர் மன்சூர் அலிகான்...

அதன்படி அவர் பேசியிருப்பதாவது, “500 கோடி ரூபாய் பணத்தை போட்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து ரூ.1000 கோடி வசூலுக்காக உழைக்கிறோம், ஆனா அரசியல்வாதிகள் ஒரே ஒரு கையெழுத்தை போட்டுட்டு ஆயிரம் கோடி, 2000 கோடினு ஆட்டையப்போடுறான்.

லோகேஷ் என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல, அதைவிட்டுட்டு, தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப் கொடுத்துட்டு இருக்கீங்க. இல்லேனா வாங்க பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கித்தரலாம். 500 மிலிட்டரி டேங்கர், 500 போர் விமானங்களை எடுத்துட்டு வாங்க போருக்கு போய் அங்குள்ள எல்லா மிலிட்டரி தளங்களையும் அழிச்சிட்டு வருவோம். பாவம் அப்பாவிங்கலாம் சாகுறாங்க. சும்மா, டம்மி துப்பாக்கியையும், அட்டக்கத்தியையும் கொடுத்துக்கிட்டு, வாங்க போருக்கு போகலாம் லோகேஷ்” என அழைத்துள்ளார் மன்சூர் அலிகான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in