ட்விட்டரில் அணிவகுத்த ஆபாச படங்களால் அதிர்ச்சியடைந்த பிரபல நடிகர்!

ட்விட்டரில் அணிவகுத்த ஆபாச படங்களால் அதிர்ச்சியடைந்த பிரபல நடிகர்!

நடிகர் மனோபாலாவின் ட்விட்டரில் கணக்கில் திடீரென ஆபாசப் படங்கள் பதிவு செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரபல இயக்குநர் மனோபாலா, இப்போது நடிகராக தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை வெளி யிடுவது வழக்கம்.

இந்நிலையில், மனோபாலாவின் ட்விட்டர் கணக்கில் திடீரென நேற்று ஆபாசப் படங்கள் பதிவானது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அந்தப் புகைப்படங்களை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தினர். அதோடு அவரை திட்டியும் கருத்துக்களைப் பதிவு செய்தனர். இந்நிலையில் அவருடைய ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து இப்படி படங்களை பதிவிட்டது தெரியவந்தது.

பின்னர் அவர் ட்விட்டர் கணக்கு சரி செய்யப்பட்டு அந்தப் புகைப்படங்கள், அவர் கணக்கில் இருந்து நீக்கப்பட்டன. பிரபலங்களின் சமூக வலைதளபக்கங்களை மர்மநபர்கள் முடக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in