ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் நடிகர் மாதவனின் `ராக்கெட்ரி’!

ராக்கெட்ரி படத்தில் நடிகர் மாதவன்
ராக்கெட்ரி படத்தில் நடிகர் மாதவன்

ஆஸ்கர் விருதுகள் பரிந்துரைப் பட்டியலில் நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான 'ராக்கெட்ரி' திரைப்படம் கடந்த 2022-ம் வருடம் ஜூலை 1-ம் தேதி வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. இந்த செய்தியைப் படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சவால் மிகுந்த உண்மை சம்பவங்களை இயக்குநர் மாதவன் படமாக்கி இருந்தார்.

மேலும், இந்தப் படம் ஏற்கெனவே ஐஎம்டிபியால் 2022-ல் இந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. மேலும், ஆர்.மாதவன் எழுதி, இயக்கி தயாரித்து மற்றும் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்த 'ராக்கெட்ரி' திரைப்படம் 2022-ம் ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அதன் முதல் காட்சியின் போது அமோக வரவேற்பைப் பெற்றது.

பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது. ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றிய நிலையில், ரஜித் கபூர், சிம்ரன், சாம் மோகன், மீஷா கோஷல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in