திருநெல்வேலி தியேட்டரும், நெகிழ்ந்த நடிகர் மாதவனும்!

ராக்கெட்ரி படத்தில் நடிகர் மாதவன்
ராக்கெட்ரி படத்தில் நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் இயக்கி, நடித்திருக்கும் ராக்கெட்ரி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் திருநெல்வேலியில் இந்தப் படத்தை திரையிட்டிருக்கும் ராம், முத்துராம் திரையரங்கம், மாவட்ட ஆட்சியருக்கு வைத்த கோரிக்கை நடிகர் மாதவனை நெகிழச் செய்துள்ளது.

நடிகர் மாதவன் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்னும் படத்தை இயக்கி, நடித்திருக்கிறார். இதில் நம்பி நாராயணனாகவே நடித்துள்ளார் மாதவன். இந்தப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்த திரைப்படத்தை நெல்லையில் திரையிட்டிருக்கும் ராம், முத்துராம் சினிமாஸ் தன் ட்விட்டர் பக்கத்தின் ஊடே நெல்லை ஆட்சியருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் ராகெட்ரி நல்ல படம். நம் நெல்லை மாவட்ட குழந்தைகளும் பார்த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் அதற்கு முயற்சிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்தப்படம் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ராம் சினிமாஸ்ம் இதற்கு தன் பங்களிப்பைச் செய்ய தயாராக உள்ளது. 1990-களில் குழந்தைகள் தவறவிடக் கூடாத படங்கள் வரும்போது, பள்ளிகளே படத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்தது.”எனவும் பதிவிட்டுள்ளனர்.

இந்தப் பதிவைப் பார்த்த நடிகர் மாதவனும், “மிகவும் உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன். நன்றி மிஸ்டர் ராம்”என பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in