'ராக்கெட்ரி’ வெற்றியை நம்பி நாராயணனுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் மாதவன்!

'ராக்கெட்ரி’ வெற்றியை நம்பி நாராயணனுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் மாதவன்!

‘ராக்கெட்ரி’ திரைப்பட வெற்றியை இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் குடும்பத்தாருடன் கேக் வெட்டி நடிகர் மாதவன் கொண்டாடியுள்ளார்.

இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை நடிகர் மாதவன் நடித்து இயக்கினார். வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியை நம்பி நாராயணன் குடும்பத்தாருடன் நடிகர் மாதவன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். நம்பி நாராயணன் அவருடைய மனைவிக்கு கேக் கூட்டி விடும் புகைப்படத்தை நடிகர் மாதவன் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், “வெற்றியை மகிழ்ச்சியாக மாற்றி குடும்பம் முழுவதும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சி. இந்த புகைப்படத்தின் உண்மையான அர்த்தம். நம்பி சாரையும், அவரது குடும்பத்தாரையும் பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த புகைப்படத்தின் உண்மையான அர்த்தம் விளங்கும். என்னைப் பொறுத்தவரையில் கடவுளின் அருளால் இந்த இலக்கு அடையப்பட்டு விட்டது ” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in