நடிகர் சேஷூ
நடிகர் சேஷூ

அதிர்ச்சி...’லொள்ளுசபா’ புகழ் நடிகர் சேஷூ காலமானார்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்புக் காரணமாக நடிகர் சேஷூ (60) சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார்.

சின்னத்திரையில் ரசிகர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியாக இருந்த ‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சேஷூ. படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சந்தானத்துடன் இவர் நடித்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலும் இவரது நகைச்சுவை கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். நாளை காலை இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

‘லொள்ளு சபா’ சேஷூ
‘லொள்ளு சபா’ சேஷூ

இருபத்தைந்துக்கும் அதிகமான திரைப்படங்களில் சந்தானம், யோகிபாபு ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார் சேஷூ. கொரோனா சமயத்தில் ஓடிப்போய் பலருக்கும் உதவியது, பல ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைத்தது என உதவும் குணம் கொண்டவராகவும் இருந்து வந்த நடிகர் சேஷூ விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு இவரது மரணம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in