`உயிரோட இருக்கிறவங்களை கொன்றுதான் பணம் சம்பாதிக்கணுமா?'- பிரபல நடிகை ஆவேசம்

`உயிரோட இருக்கிறவங்களை கொன்றுதான் பணம் சம்பாதிக்கணுமா?'- பிரபல நடிகை ஆவேசம்

``உயிரோடு இருப்பவர்களை கொன்றுதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா?'' என்று பிரபல நடிகை ஆவேசமாகக் கூறியுள்ளார்.

விஷாலின் ’மருது’ படத்தில் அவர் பாட்டியாக நடித்திருப்பவர், மலையாள நடிகை குள்ளப்புள்ளி லீலா. ரஜினியின் ’முத்து’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், நாச்சியார், மாஸ்டர், அரண்மனை 3, அண்ணாத்த, கொம்பு வச்ச சிங்கம்டா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தொடர்ந்து நடித்து வருகிறார்.

மருது படத்தில் விஷால், லட்சுமி மேனனுடன் குள்ளப்புள்ளி லீலா
மருது படத்தில் விஷால், லட்சுமி மேனனுடன் குள்ளப்புள்ளி லீலா

இவர் உயிரிழந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்றில், தவறாக சிலர் செய்தி வெளியிட்டனர். இது பரபரப்பானது. கடைசியில் இந்தத் தகவல் லீலாவுக்கே வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவருக்குத் தொடர்ந்து போன் அழைப்புகள் வரத் தொடங்கின. சிலர் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்தியும் எழுதிவிட்டனர்.

இந்நிலையில் இந்த வதந்தி குறித்து நடிகை குள்ளப்புள்ளி லீலா கூறும்போது, ``இதுபோன்ற தவறானச் செய்திகளைத் தயவு செய்து பரப்ப வேண்டாம். இந்த யூடியூப் செய்தியைக் கேட்டு, தெரிந்தவர்கள், உறவினர்கள் என ஏராளமானவர்கள் போன் செய்து விசாரித்தார்கள். விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். யூடியூப் சேனல் நடத்தும் பலர் லைக்ஸ் மற்றும் ஷேரிங்கிற்காக தவறான தகவல்களைத் தருகிறார்கள். அதன்மூலம் அவர்களுக்குப் பணம் வருகிறது என்பது எனக்குத் தெரியும். அதற்காக உயிருடன் இருப்பவர்களைக் கொன்றுதான் பணம் சம்பாதிக்க வேண்டுமா?. என்னைப் பற்றிய செய்தியை அரை மணி நேரத்தில் 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்'' என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in