'வெந்து தணிந்தது காடு': சிம்பு ரசிகர்களால் கூல் சுரேஷ் காருக்கு கேடு

'வெந்து தணிந்தது காடு': சிம்பு ரசிகர்களால் கூல் சுரேஷ் காருக்கு  கேடு

'வெந்து தணிந்தது காடு' படம் பார்க்க வந்த நடிகர் கூல் சுரேஷ் கார் கண்ணாடி சிம்பு ரசிகர்களால் உடைக்கப்பட்டது. அத்துடன் கூல் சுரேஷ் சட்டையும் கிழிந்து போனது.

நடிகர் கூல் சுரேஷ்.
நடிகர் கூல் சுரேஷ்.

தமிழ் திரைப்பட நடிகர் கூல் சுரேஷ். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகராவார். எந்த புதிய திரைப்படம் வெளியானாலும் அப்படம் குறித்து நெட்டிசன்களிடம் முதல் நபராக அவர் கருத்து கூறி வருவார்.

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படம் வருவதற்கு முன்பு இரண்டு மாதங்களாக இப்படத்தின் புரமோஷன் வேலைகளை கூல் சுரேஷ் செய்து வந்தார். எந்த படம் வந்தாலும், அல்லது எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், அதில் 'வெந்து தணிந்தது காடு' படத்தை வைத்தே கூல் சுரேஷ் பஞ்ச் வசனம் பேசுவது வழக்கம்.

நடிகர் கார்த்தி நடித்த 'விருமன்' படத்தை கூல் சுரேஷ் பார்க்க வந்த போது ‘வெந்து தணிந்தது காடு…விருமனுக்கு வணக்கத்த போடு’ என்று பஞ்ச் வசனம் பேசினார். இவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் சென்னையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் இன்று ரிலீஸானது. இப்படத்தைப் பார்க்க கூல் சுரேஷ் காரில் வந்தார். அவரைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் ஆர்வத்தில் அவர் மீது தண்ணீரை ஊற்றி வரவேற்றனர். அவருடன் நிறைய ரசிகர்கள் காரில் ஏறி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது கூல் சுரேஷின் கார் கண்ணாடி உடைத்து போனது. அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு இழுத்த போது, அவரின் சட்டையும் கிழிந்து போனது.

இதுகுறித்து கூல் சுரேஷ் கூறுகையில், " சிம்பு ரசிகர்கள் என் மீது கொண்ட அன்புக்கு நன்றி. அதேநேரம் கார் கண்ணாடி உடைந்து விட்டது. கண்ணாடி உடைந்தாலும், என் இதயம் உடையவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in