கவினின் ‘டாடா’ ஜனவரியில் வெளியாகிறது!

கவினின் ‘டாடா’ ஜனவரியில் வெளியாகிறது!
Updated on
1 min read

நடிகர் கவின் நடித்திருக்கும் ‘டாடா’ திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.

சின்னத்திரையில் ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் கவின் தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அவரது அடுத்தத் திரைப்படமான ‘டாடா’ இந்த மாதம் ஜனவரியில் வெளியாக இருக்கிறது என்பதை படக்குழு தெரிவித்துள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் வழங்கும் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின்- அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த 'டாடா' படத்தை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

படத்தின் முதல் பார்வை மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது.

ரொமாண்டிக் என்டர்டெயினர் ஜானரில் உருவாகி இருக்கும் 'டாடா', சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் திரையரங்குகளில் வெளியீட்டு தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, கே.பாக்யராஜ், ஐஷ்வர்யா, 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ’வாழ்' புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in