அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் கார்த்தியின் `சர்தார்’

அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் கார்த்தியின் `சர்தார்’

கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது.

கார்த்தி நடிப்பில் உருவாகும் படம், 'சர்தார்'. இதில் இரட்டை வேடங்களில் அவர் நடித்து வருகிறார். ஒரு கேரக்டரில் போலீஸாகவும் மற்றொரு கேரக்டரில் வயதானவராகவும் நடிக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கும் இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார்.

மற்றும் சிம்ரன், லைலா, முரளி ஷர்மா, முனீஷ்காந்த் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சங்கி பாண்டே
சங்கி பாண்டே

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் தியேட்டர் வெளியீட்டிற்குப் பின்னான டிஜிட்டல் உரிமையை, ஆஹா தமிழ் ஓடிடி தளம் ரூ.20 கோடிக்கு பெற்றுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கும் இந்தப் படத்துக்காக, அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் வில்லன் சங்கி பாண்டே நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிக்காக மட்டும் ரூ. 4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜார்ஜியாவிலும் இந்தப் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

முனீஷ்காந்த், இயக்குநர் மித்ரன், கார்த்தி
முனீஷ்காந்த், இயக்குநர் மித்ரன், கார்த்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in