நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் திடீர் ஹேக்: ரசிகர்கள் கேட்ட கேள்வி இதுதான்!

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் திடீர் ஹேக்: ரசிகர்கள் கேட்ட கேள்வி இதுதான்!

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அதனை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் பலர் தங்களது புகைப்படங்கள் மற்றும் படங்கள் சார்ந்தவைகளை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்தி எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர். மேலும் தனது படம் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டு வருவதோடு சமூக நலன்கள் குறித்த அறிக்கைகளையும் தமது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். கடைசியாக தனது முகநூல் பக்கத்தில் புதிய படமான ஜப்பான் படபூஜை தொடர்புடைய புகைப்படங்களை அவர் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கத்தில் கேம் சம்பந்தமான வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு லைவ் செய்யப்பட்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் கார்த்தியிடம். ஏன் கேமை லைவ் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றும் கேம் பெயர் என்ன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கார்த்திக், இது குறித்தான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், என்னுடைய ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் குழுவோடு பேசி பிரச்சினையை சரி செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in