பட்டியலின பெண்களை இழிவாக பேசிய ஆடியோ விவகாரம்; நடிகர் கார்த்திக்குமார் பரபரப்பு புகார்!

கார்த்திக் குமார்
கார்த்திக் குமார்
Updated on
2 min read

"பட்டியலின பெண்களை அவதூறாக பேசுவது போன்ற ஆடியோவில் இருப்பது எனது குரல் இல்லை. இந்த ஆடியோவை உருவாக்கி வெளியிட்ட மர்மநபரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகர் கார்த்திக்குமார் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

பாடகி சுசித்ரா, சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்வினை பொதுவெளியில் பேசி வருகிறார். இதில், தனது முன்னாள் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார், ஓரின சேர்க்கையாளர் என்று பகீரங்கமாக பேசியிருந்தார். இதற்கு ஓரின சேர்க்கையாளர் என்று சொல்வதில் பெருமை கொள்ளுங்கள் என்று அதுகுறித்து தன்னிலை விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். மேலும், இதுபோன்ற பொதுவெளியில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கார்த்திக் குமார் பேசியது போன்று ஒரு ஆடியோ ஒன்று வெளியானது.

பாடகி சுசித்ரா
பாடகி சுசித்ரா

அந்த ஆடியோ, பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த பெண்களை அவதூறாகப் பேசுவது போல் இருந்தது. இந்த ஆடியோவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு, கார்த்திக்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் அல்ல என்றும், போலியாக சித்தரித்து ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக சமூகவலைதள பக்கத்தில் கார்த்திக் குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியல் இன ஆணையம் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை கார்த்திக்குமார் இன்று அளித்துள்ளார். அதில், 'சமூக வலைத்தளத்தில் பரவும் ஆடியோ நான் பேசியது இல்லை. மர்ம நபர் யாரோ ஒருவர் தனது குரல் போன்று சித்தரித்து அந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர். உடனடியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஆடியோ பதிவில் குழந்தைகள் சத்தம் கேட்பதாகவும், தனக்கு குழந்தைகள் யாரும் இல்லை.

சுசித்ரா- கார்த்திக்குமார்
சுசித்ரா- கார்த்திக்குமார்

தான் பெண்களைப் பற்றி தவறாக பேசக்கூடிய ஆள் இல்லை. அந்த ஆடியோவில் பேசியது தான் என எண்ணி சிலர் தன்னை மிரட்டி வருகின்றனர். உடனடியாக அதனைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தால் தனது பெயருக்கும், தனது குடும்பத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த ஆடியோவை வெளியிட்ட மர்ம நபரை விரைவில் கண்டறிந்து அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

ஓடுபாதையில் விமானம் மீது மோதிய டிரக்; உயிர் தப்பிய 180 பயணிகள்; புனேவில் பரபரப்பு!

கையில் கட்டுடன், கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராய்!

பெரும்பான்மை கிடைக்கலைன்னா பாஜகவின் ‘பிளான் பி’ என்ன? - அமித் ஷா அட்டகாச பதில்!

அஞ்சலி கொலையில் திடீர் திருப்பம்... ஓடும் ரயிலிலிருந்து குதித்த குற்றவாளி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in