'தளபதி 67’ படத்தில் நடிக்க மறுத்த கார்த்திக்: காரணம் இதுதானா?

'தளபதி 67’ படத்தில் நடிக்க மறுத்த கார்த்திக்: காரணம் இதுதானா?

‘தளபதி 67’ படத்தில் நடிக்க நடிகர் கார்த்திக் மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’வாரிசு’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் தன்னுடைய 67-வது படத்திற்காக இணைய இருக்கிறார். இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் 5-ம் தேதி விஜய் சினிமாவுக்குள் நுழைந்து 30 வருடங்கள் ஆவதை ஒட்டி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, இயக்குநர் கெளதம் மேனன் ஆகியோர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ‘நவரச நாயகன்’ கார்த்திக் இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேட்டிருக்கிறார். ஆனால், தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி இந்தப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கார்த்திக் மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு கெளதம் கார்த்திக்குடன் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்திற்குப் பிறகு பெரிதாக வேறு எந்தப் படங்களும் நடிக்காமல் இருந்தார் கார்த்திக். காலில் உள்ள வலி காரணமாக கடந்த சில மாதங்களாக பிஸியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார் கார்த்திக். அவரது நடிப்பில் தற்போது ‘அந்தகன்’ படம் மட்டும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in