பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவன் வேடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படம் தீபாவளி ரிலீசாக தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை 'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகைகள் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், முனீஷ்காந்த், குழந்தை நட்சத்திரம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சர்தார் திரைப்படம் விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்டுள்ளார். இதே படத்தை தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பாக வெளியிட்டுள்ளார்.

தெலுங்கில் இந்தப் படத்தை பிரபலப்படுத்தும் விதமாக நடிகர் நாகார்ஜுனா தொகுத்துவழங்கும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்துகொண்டுள்ளார். இன்று (அக்.23) ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in