'சர்தார்’ படத்தின் அறிமுகப் பாடலை பாடி அசத்திய நடிகர் கார்த்தி

'சர்தார்’ படத்தின் அறிமுகப் பாடலை பாடி அசத்திய நடிகர் கார்த்தி

‘சர்தார்’ படத்தில் நடிகர் கார்த்தி அறிமுகப் பாடலைப் பாடியுள்ளார்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஜா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘சர்தார்’. இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்தப் படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் கார்த்தி இந்தப் படத்தில் பல வேடங்களில் நடித்து இருக்கிறார். ஸ்பை த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாகி இருப்பதாக இயக்குநர் பி.எஸ். மித்ரன் தெரிவித்து இருக்கிறார். இப்போது ‘சர்தார்’ படத்தின் அறிமுகப் பாடலை நடிகர் கார்த்தி பாடி இருப்பதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இந்தப் பாடல் க்ளாஸிக்கல் மற்றும் ரூரல் ஃபோக் பாடலாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இந்தப் பாடல் ‘ஏறுமயிலேறி’ எனத் தொடங்கும் இந்தப் பாடலை யுகபாரதி எழுதி இருப்பதாக கூறியுள்ள ஜிவி பிரகாஷ்குமார் கார்த்தி ஸ்டுடியோவில் பாடும்படியான புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கிறார். இப்போதைக்கு சென்சாருக்காக அனுப்பப்பட்டிருக்கும் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த வருடம் ‘சர்தார்’ படத்துடன் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தகக்து.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in