மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த நடிகர் கார்த்தி!

மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி
மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகர் கார்த்தி

'விருமன்' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக மதுரைக்கு வந்த நடிகர் கார்த்தி இன்று அதிகாலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து கொண்ட காணொளி வைரலாகி வருகிறது.

இயக்குநர் முத்தையா இயக்கி, நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து, இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'விருமன்'. இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.

விழாவில் திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, கருணாஸ். இயக்குநர்கள் பாரதிராஜா, முத்தையா, சங்கர் மற்றும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று விழாவை முடித்துவிட்டு இன்று அதிகாலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வந்த நடிகர் கார்த்தி, சாமி தரிசனம் செய்தார். தற்போது, இவர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in