யுவன் சங்கர் ராஜாவுக்கு நடிகர் கார்த்தி கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்!

யுவன் சங்கர் ராஜாவுக்கு நடிகர் கார்த்தி கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்!

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நடிகர் கார்த்தி நெகிழ வைத்துள்ளார்.

கார்த்தி நடித்த பருத்தி வீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் ’விருமன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. ’விருமன்’ படத்தின் பின்னணி இசையை விரைவில் அவர் தொடங்க இருக்கிறார். இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகும் இந்தப் படம், ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில், திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு விலை உயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரம் ஒன்றை, நடிகர் கார்த்தி பரிசளித்துள்ளார்.

இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். சிறுவயதில் இருந்தே நட்புடன் பழகி வருகின்றனர். இந்த எதிர்பாராத பரிசை பெற்ற யுவன் சங்கர் ராஜா, கார்த்தியை கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in