
'96' திரைப்படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் கார்த்தி, மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்', பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'சர்தார்' என அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். தற்போது 'ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜூமுருகனின் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் 'பொன்னியின் செல்வன் 2', 'கைதி 2', 'சர்தார் 2', நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக உள்ளார்.
இந்த நிலையில், 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.