'சர்தார்’ பட இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் கார்த்தி

'சர்தார்’ பட இயக்குநருக்கு கார் பரிசளித்த நடிகர் கார்த்தி

‘சர்தார்’ படத்தின் வெற்றிக்காக படத்தின் இயக்குநருக்கு நடிகர் கார்த்தி கார் பரிசளித்துள்ளார்.

இந்த வருட தீபாவளிக்கு நடிகர் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் ‘சர்தார்’, ‘ப்ரின்ஸ்’ ஆகியத் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. இதில் ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாகும் நிலையில் 100 கோடி வசூலை நெருங்கியுள்ளதால் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

மேலும் சமீபத்தில் நடந்த படத்தின் வெற்றி விழாவில் ‘சர்தார் 2’ வரும் எனவும் அறிவித்தனர். இந்த வருடம் ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களை அடுத்து நடிகர் கார்த்திக்கு ஹாட்ரிக் வெற்றியாக ‘சர்தார்’ திரைப்படமும் அமைந்துள்ளது. இதற்காக ‘சர்தார்’ படத்தின் இயக்குநரான மித்ரனுக்கு கார் ஒன்றை நடிகர் கார்த்தி பரிசளித்துள்ளார்.

இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மித்ரனுக்கு, தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்தப் பரிசை இயக்குநருக்கு வழங்கினார்.

‘சர்தார்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது இயக்குநர் ராஜூ  முருகனின் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதைத் தவிர்த்து, ‘கைதி2’, ‘பொன்னியின் செல்வன்2’, ‘சர்தார்2’ என அடுத்தடுத்து அவரது கைவசம் படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in