`சர்தார்2' படம் குறித்து கார்த்தி கொடுத்த அப்டேட்... ரசிகர்கள் குஷி!

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி

'சர்தார் 2' படம் குறித்து நடிகர் கார்த்தி கொடுத்துள்ள அப்டேட்டால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, ராஷி கண்ணா உள்ளிட்டப் பலர் நடிப்பில் 'சர்தார்' படம் வெளியானது. அப்பா- மகன் பாசம், தேசப்பற்று உள்ளிட்டவற்றை மையக்கருவாகக் கொண்டு இந்தப் படம் வெளியானது. கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக 100 கோடியை எட்டி வெற்றிப் படமாக அமைந்தது.

படம் வெளியான போதே இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பும் அப்போது வெளியானது. இந்த நிலையில் படம் வெளியாகி ஓராண்டு ஆகி இருப்பதை மகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, ''சர்தார்' பட வெற்றிக்குக் காரணமான ரசிகர்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி! விரைவில் 'சர்தார் 2' பணிகள் ஆரம்பமாகும்' எனக் கூறியுள்ளார்.

இந்த வருட தீபாவளிக்கு ராஜமுருகன் இயக்கத்தில் கார்த்தியின் 'ஜப்பான்' படம் வெளியாகியுள்ளது. இதற்கடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். இதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி2' ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in