'சர்தார்' படக்குழுவிற்கு பரிசு கொடுத்து அசத்திய நடிகர் கார்த்தி

'சர்தார்' படக்குழுவிற்கு  பரிசு கொடுத்து அசத்திய நடிகர் கார்த்தி

சர்தார் படம் வெற்றி விழாவைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி வாட்டர் பாட்டிலை நடிகர் கார்த்தி பரிசாக வழங்கியுள்ளார்.

’இரும்புத் திரை’, ’ஹீரோ’ போன்ற படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்த ‘சர்தார்’ படத்தை இயக்கினார். இப்படம் அக்.21-ம் தேதி வெளியானது. தண்ணீர் தனியார்மயமாவதால் ஏற்படும் தீமையையும், நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்திய இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்ட நிலையில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நடிகர் கார்த்தி ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி வாட்டர் பாட்டிலைப் பரிசாக வழங்கியுள்ளார். இந்த வாட்டர் கேன் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in