சினிமாவில் 37 ஆண்டுகள்: நடிகர் நாசருக்கு கார்த்தி வாழ்த்து

சினிமாவில் 37 ஆண்டுகள்: நடிகர் நாசருக்கு கார்த்தி வாழ்த்து

சினிமாவில் 37 வருடங்களை நிறைவு செய்துள்ளதை அடுத்து நடிகர் நாசருக்கு நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எந்த கேரக்டர்களில் சிறப்பாக பொருந்தக் கூடியவர் நடிகர் நாசர். வில்லன், குணச்சித்திரம் என எந்த கேரக்டரையும் நடிப்பால் மெருகூட்டும் அவர், சினிமாவுக்கு வந்து 37 வருடங்கள் ஆகின்றன. இதையடுத்து நடிகர் சங்கத் தலைவராக அவருக்கு நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி

“37 ஆண்டுகளாக தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி நாசர் சார். ‘மாயன்’, ‘பேபி’, ‘குப்புசாமி, ‘பத்ரி’ போன்ற உங்களது கதாபாத்திரங்கள் இன்றுவரை நம்மிடையே இருந்துகொண்டுதான் இருக்கின்றன. மகத்தான பணிக்கு வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.