`மைனஸை ஃப்ளஸாக மாற்றியவர் அண்ணன்: சிறு வயது புகைப்படம் போட்டு சூர்யாவை வாழ்த்தும் தம்பி கார்த்தி

`மைனஸை ஃப்ளஸாக மாற்றியவர் அண்ணன்: சிறு வயது புகைப்படம் போட்டு சூர்யாவை வாழ்த்தும் தம்பி கார்த்தி

தனது அண்ணன் சூர்யாவின் 25 வருட திரையுலக பயணத்தையொட்டி அவரது தம்பியும் நடிகருமான கார்த்தி, தனது அண்ணனுடன் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

‘நேருக்கு நேர்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சூர்யா. இதில், விஜய், சிம்ரன், கவுசல்யா, ரகுவரன் உட்பட பலர் நடித்திருந்தனர். கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி இந்தப் படம்ட வெளியானது. இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, சமூக வலைதளங்களில், அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து நடிகர் சூர்யா, “25 ஆண்டு கால திரைப் பயணம் உண்மையிலேயே அழகான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்டதாக இருக்கிறது. கனவு காணுங்கள், அதை நம்புங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தனது அண்ணன் சூர்யாவின் 25 வருட திரையுலக பயணத்தை வாழ்த்தியுள்ள சகோதரர் கார்த்தி, "அவர் (சூர்யா) தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப்பெரிய ஃப்ளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தார். அவர் தனது சொந்த சாதனைகளை விஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு நபராக, அவர் ஏற்கெனவே தாராளமான இதயத்தை இன்னும் பெரிதாக்கினார் மற்றும் ஆயிரக்கணக்கான தகுதியான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார். அது என் சகோதரர்!" என்று கூறியுள்ளார். அதோடு, தனது அண்ணன் சூர்யாவுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in