`லியோ' படம் பார்த்த கமல்ஹாசன்... வைரலாகும் புகைப்படம்!

விஜய்- கமல்ஹாசன்
விஜய்- கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் லியோ படத்தை பார்த்து பாராட்டி உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியானது. படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் வெளியான முதல் நாளிலேயே நூறு கோடியைக் கடந்து வசூல் செய்திருப்பதாகத் தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக அதிகரித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். 'லியோ' படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருவதால் படத்தின் இறுதியில் நடிகர் கமல்ஹாசனின் வாய்ஸில் முடிந்திருக்கும்.

'லியோ' படம் கமல்ஹாசனுக்கு ஸ்பெஷல் ஸ்கிரீனிங்
'லியோ' படம் கமல்ஹாசனுக்கு ஸ்பெஷல் ஸ்கிரீனிங்

மேலும் முதல் நாளே ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய்யின் ரசிகர்களுடன் சேர்ந்து அனிருத், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பல பிரபலங்களும் படம் பார்த்தனர். பின்னர் நடிகர் ரஜினிகாந்தும் படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு 'லியோ' திரைப்படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் போடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விரைவில் நடிகர் கமல்ஹாசன் 'லியோ' படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துக்களை தெரிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in