சாதிப் பிரச்சினையில் சிக்கிய கமலின் `தக் லைஃப்’ படம்!

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தின் அறிவிப்பு வந்த நாளிலேயே அது இன்னொரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற சிக்கலை சந்தித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், ‘இந்தியன்2’, ‘KH 234’ ஆகிய படங்களில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்களை படக்குழுவினர் கொடுத்து வருகிறார்கள். அதில் நேற்று நடிகர் கமல்ஹாசன் - மணி ரத்னத்துடன் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இணையும் 234 வது படத்தின் தலைப்பு ‘தக் லைஃப்’ என அறிவித்தனர். இதன் அறிமுக டீசரும் வெளியானது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் முதற்கொண்டு பல விஷயங்களும் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

’தக் லைஃப்’ அறிமுக டீசரில் கமல்ஹாசன்
’தக் லைஃப்’ அறிமுக டீசரில் கமல்ஹாசன்

இதன் அறிமுக டீசரில், கமல்ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என அறிமுகமாகிறார். சாதிப்பெயரை சொல்கிறார் கமல்ஹாசன் என சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும், இன்னொரு தரப்பினர் ‘நாயகன்’ படத்தின் இரண்டாம் பாகமா இது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ரைஸ் ஆஃப் தி ஸ்கை வாக்கர்’ என்ற ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற காட்சிகளைப் போலவே, இதன் அறிமுக டீசரும் அமைந்திருப்பதால் அந்தப் படத்தின் காப்பியா என்ற சர்ச்சையும் இதைச் சுற்றி தற்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in