28 வருடங்களை நிறைவு செய்த ‘இந்தியன்’ திரைப்படம்... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வைத்த ‘இந்தியன்2’!

 ’இந்தியன்2’
’இந்தியன்2’

நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படம் வெளியாகி 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்காக ‘இந்தியன்2’ திரைப்பட குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் ‘இந்தியன்’. நாட்டில் நடக்கும் ஊழலுக்கு எதிராக நேர்மையாக இருக்கும் ஒருவனின் கோபம்தான் இந்தப் படத்தின் ஒன்லைன். இதில் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் கமல் நடித்திருப்பார்.

இந்தக் கதை முதலில் நடிகர் ரஜினிகாந்திற்காக ஷங்கர் எழுதியிருந்தார். ஆனால், சில காரணங்களால் ரஜினியால் நடிக்க முடியாமல் போக, பின்பு கமலிடம் கதை வந்தது. இந்தப் படத்தில் நடித்ததற்காக மூன்றாவது முறையாக கமல் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, செயற்கையான ஒப்பனை எனப்படும் பிராஸ்தடிக் மேக்கப்பை (prosthetic makeup) முதல் முறையாக இந்திய சினிமாவில் இந்தப் படம் மூலம் அறிமுகம் செய்தவர் கமல் தான். இதற்காக ஹாலிவுட்டில் இருந்து மைக்கேல் என்ற நிபுணர் தமிழுக்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல பெருமைகளை கொண்ட ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது.

ஜூன் மாதம் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆனதை ஒட்டி ‘இந்தியன்2’ படக்குழு ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இதில் ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தில் உள்ள இந்தியன் தாத்தாவும் இரண்டாவது பாகத்தில் இருக்கும் இந்தியன் தாத்தா தோற்றத்தையும் சேர்த்து புது போஸ்டராக வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் இணையத்தில் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in