நடிகர் விஜய் ஆண்டனி குறித்து கமல் சொன்ன ரகசியம்: ஞானசம்பந்தன் பேட்டி!

ஞானசம்பந்தன்...
ஞானசம்பந்தன்...

தமிழ் ஆர்வலர், பேராசிரியர், நடிகர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகம் கொண்ட திரு. கு. ஞானசம்பந்தன் நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியன் காதல் ஜோடிக்கு தமிழ் முறைப்படி திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

தன்னுடைய தமிழ் ஆர்வம், நடிகர் கமல்ஹாசனுடனான நட்பு என தன் அனுபவங்களை நம் வாசகர்களுடம் பகிர்ந்துள்ளார்.

எல்லோருக்கும் நடிகர் விஜய் ஆண்டனியை அதற்கு முன்பு, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியாக தான் தெரியும். ஆனால், தமிழில் வெளியான முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ புத்தகத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளையின் வழித்தோன்றல் தான் விஜய் ஆண்டனி என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

‘ஜெயிலர்’ படம் பார்த்து விட்டு தன்னுடைய சேனலில் செய்த விமர்சனத்தை, தனது குழுவினருடன் பார்த்த பிறகு இயக்குநர் ஷங்கர், ‘பரவாயில்லை. படத்தை ஒரு பார்வையாளனாக அணுகி உங்கள் கருத்து என்னவோ அதை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ந்து இது போலவே சிறப்பாக செய்யுங்கள்’ என்று பாராட்டி இருக்கிறார்.

யூடியூப் ஆரம்பிக்க நடிகர் கமல்ஹாசன் கொடுத்த ஐடியா, தன் மகள் திருமணத்தில் கமல் சொன்ன வார்த்தை, ‘மருதநாயகம்’, ‘விருமாண்டி’, ‘தசாவதாரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடிகர் கமலுடன் இணைந்து பணிபுரிந்த போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் என கு.ஞானசம்பந்தனின் கலகலப்பும், தமிழ் சுவையும், கொஞ்சமும் குறையாத பேட்டி நம் வாசகர்களுக்காக வீடியோ வடிவில்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in