
கேரள அரசு சார்பில் ’கேரளம் 2023’ என்ற நிகழ்ச்சி நேற்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் உருவான நாளான நவம்பர் 1-ம் தேதி ஆண்டு தோறும், ‘கேரளீயம்’ என்ற கலாச்சாரா விழா கொண்டாடப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்றில் இருந்து ஒருவாரத்திற்கு நடைபெறும் இந்த விழாவை முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் மம்மூட்டி, மோகன்லால், கமல்ஹாசன், மஞ்சு வாரியர், ஷோபானா எனத் திரையுலகினரும், பல தொழிலதிபர்களும் கலந்து கொண்டர்.
இதில் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி ஆகிய மூவரும் வேட்டி, சட்டையுடன் அருகருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் “கேரளாவில் எப்போதும் எனக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. இம்மாநிலம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு நான் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கலாம் என முடிவெடுத்திருந்தபோது, 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மக்கள் திட்டம் மூலம் அதிகாரத்தை பரவலாக்கி நாட்டுக்கே வழிகாட்டியாக திகழ்ந்து வரும் கேரளாவின் முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனைப் பெற்றேன்.
தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளை கையாளும்போது கேரளாவின் மக்கள் திட்டத்தை கவனத்தில் கொள்வேன். தமிழகமும், கேரளாவும் பிரிக்க முடியாத பந்தம் கொண்டவை. நடனம், இசை, சினிமா தொடங்கி உணவு உள்ளிட்டவற்றால் இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக கேரளா திகழ்கிறது” எனப் பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!