திரைத்துறையில் வசைபாட வேண்டாம்... நடிகர் கமல்ஹாசன் சூசகம்!

டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழாவில்...
டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழாவில்...

”திரைத்துறையில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள வேண்டாம்” என நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். இதன் மூலம் அவர் லிங்குசாமியின் புகாருக்கு சூசகமாகப் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிறுவனரும், திரை உலகின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான மறைந்த டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சென்னை, மயிலாப்பூரில் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமணம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், நடிகர் கமல்ஹாசன், நாசர் உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் பேசிய கமல்ஹாசன், சினிமா துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ராமானுஜம் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், “இது ஒரு குடும்ப விழா. என்னை அழைக்கவில்லை என்றாலும் கலந்து கொள்வேன். நம் குடும்பம் சிறியது. இதில் பல விவாதங்கள் வரும். அதற்காக அதிகம் யாரையும் திட்டி, வசைபாட வேண்டும் என்பதில்லை.

டி.இராமானுஜம் எங்களுடன் பேசி பழகியவர். அவரை திரையுலகின் தந்தை என்று சொல்வது பொருத்தமானது. இவருக்கு விழா எடுக்க யார் யாருக்கு எல்லாம் எண்ணம் தோன்றியதோ, அத்தனை பேருக்கும் எனது நன்றி” என்றார்.

சினிமா குடும்பத்தில் யாரையும் திட்ட வேண்டாம் என்று கமல் சூசகமாக இயக்குநர் லிங்குசாமியை தான் சொல்லி இருக்கிறார் எனப் பலரும் சொல்லி வருகின்றனர்.

டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழாவில்...
டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழாவில்...

ஏனெனில், ‘உத்தமவில்லன்’ பட நஷ்டம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் இன்னொரு படத்தில் நடிக்க தேதி தராமல் பல வருடங்களாக ஏமாற்றி வருகிறார் என இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தது. இதற்கான பேச்சுவார்த்தையில் நடிகர் கமல் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதற்காக கமல் இந்த நிகழ்ச்சியில் சூசகமாக பதில் கொடுத்துள்ளார் எனவும் சொல்லி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in