நேதாஜி சிலைக்கு முன் இந்தியன் தாத்தா!: வைரலாகும் கமல்ஹாசனின் புகைப்படம்

நேதாஜி சிலைக்கு முன் இந்தியன் தாத்தா!: வைரலாகும் கமல்ஹாசனின் புகைப்படம்

சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்ட நேதாஜி சிலைக்குக் கீழ் 'இந்தியன் 2' திரைப்பட படப்பிடிப்பில் இருந்த புகைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தின் 'இந்தியன் 2' திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தியன் தாத்தா கெட்டப்பில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த கமல்ஹாசன் புகைப்படம் வெளியாகி வைரலானது.

தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், கமல்ஹாசன் இந்தியன் தாத்தா கெட்டப்பில் நேதாஜி சிலைக்கு கீழ் இருக்கும் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1997-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு சிலையை இன்றைய நாளில் (15.12.1997) திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in