நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளுக்காக 'இந்தியன் 2' அசத்தல் போஸ்டர் வெளியீடு

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளுக்காக  'இந்தியன் 2' அசத்தல் போஸ்டர்  வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், 'இந்தியன் 2' படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அவரை பெருமிதப்படுத்தியுள்ளது.

ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்ட வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய படம் 'இந்தியன்'. நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அவருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார், ஜீவா ஒளிப்பதிவு செய்தார். பல்வேறு விருதுகளை இப்படம் குவித்தது.

இதன் காரணமாக 'இந்தியன் 'படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் முடிவு செய்தார்.இதையடுத்து 'இந்தியன் 2' என்ற பெயருடன் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு இந்தியன் 2 படக்குழு சார்பில் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்து இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நீங்கள் எங்கள் பொக்கிஷம், பன்முக திறமை கொண்ட கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் " என தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் கமல் ரசிகர்களால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in