`இந்தியன்2’ படத்துக்காக கமல்ஹாசன் எடுத்த ரிஸ்க்!

`இந்தியன்2’ படத்துக்காக கமல்ஹாசன் எடுத்த ரிஸ்க்!

நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன்2’ படத்தில் ஒரு காட்சிக்காக ரிஸ்க் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் ‘இந்தியன்2’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த 2019-ல் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கரோனா மற்றும் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக நின்றது. பின்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது என படக்குழு அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே, 70% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 30% படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அனிருத் இசையில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

மேலும் இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன்2’ படம் மட்டுமில்லாது, தெலுங்கில் ராம்சரண் படத்தையும் இயக்கி வருவதால், ‘இந்தியன்2’ படத்தில் ஷங்கருடன் இயக்குநர்கள் சிம்புதேவன், வசந்தபாலன், அறிவழகன் உள்ளிட்ட இயக்குநர்களும் இணைந்துள்ளனர். தற்போது நடிகர் கமல்ஹாசன் தொடர்பானக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

இதில் படத்தில் இடம்பெறும் பத்துநிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். இதில் நடித்திருக்கும் கமல்ஹாசன், ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட அந்த பத்துநிமிடக் காட்சியில் ஒரே சமயத்தில் 14 மொழிகளில் பேசி அசத்தி இருக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பத்துநிமிடக் காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

ஒருபக்கம் ‘இந்தியன்2’, ’விக்ரம்2’, இயக்குநர் பா.ரஞ்சித்துடன் ஒரு படம் என தற்போது படங்களில் நடிகர் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வரும் அதேசமயம் அடுத்த மாத ஆரம்பத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் ஆறாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in