`உயிரே, உறவே, தமிழே நன்றி'- தொப்புள் கொடி உறவுகளுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்!

`உயிரே, உறவே, தமிழே நன்றி'- தொப்புள் கொடி உறவுகளுக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்!

’விக்ரம்’ படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் கடந்த 3-ம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்தப் படம் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என்று படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், ``தமிழர்கள் இல்லாத நாடில்லை, தேமதுரத் தமிழோசை ஒலிக்காத ஊரில்லை எனும் அளவுக்கு உலகம் முழுக்கப் பரந்து விரிந்திருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு என் வணக்கம். திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் ’விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த பிரம்மாண்டமான வெற்றியை, எனக்குப் பரிசளித்த தொப்புள் கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்த்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த சினிமாக்களின் மூலம் உங்களைத் தொடர்ந்து என்டர்டெயின் செய்வதுதான் நான் உங்களுக்குச் செய்யக்கூடிய பதில் நன்றி என்பதை அறிவேன். அதைச் செய்வேன். உயிரே, உறவே, தமிழே நன்றி'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in