நடிகர் கமல்ஹாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு: மருத்துவமனை அறிக்கை என்ன சொல்கிறது?

நடிகர் கமல்ஹாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு: மருத்துவமனை அறிக்கை என்ன சொல்கிறது?

நடிகர் கமல்ஹாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இரவு போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் , விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். அத்துடன் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படப்பிடிப்பிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். மூத்த இயக்குநர் கே.விஸ்வநாத் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ஞாயிறன்று கமல்ஹாசன் ஹைதராபாத் சென்றிருந்தார். இதன் பின் மீண்டும் அவர் சென்னைக்குத் திரும்பிய பின் உடல்சோர்வாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், சளி உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளும் அவருக்கு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in