`இந்த ரெக்கார்டை நீங்களே முறியடியுங்கள்'- `காந்தாரா’ நடிகரைப் பாராட்டிய கமல்ஹாசன்!

`இந்த ரெக்கார்டை நீங்களே முறியடியுங்கள்'- `காந்தாரா’ நடிகரைப் பாராட்டிய கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் ‘காந்தாரா’ திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியாகி பின்பு பான் இந்தியா படமாகவும் வெற்றிப் பெற்றது. படம் வெளியானபோதே படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனும் படம் குறித்தான பாராட்டு கடிதத்தை ரிஷப் ஷெட்டிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து ரிஷப் ஷெட்டி கூறியிருப்பதாவது, ‘இந்திய சினிமாவின் லெஜண்ட்டான நடிகர் கமல்ஹாசனிடம் இருந்து இதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த எதிர்பாராத பரிசைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இதைக் அனுப்பி வைத்ததற்கு நன்றி கமல் சார்” எனத் தெரிவித்துள்ளார். ‘காந்தாரா’ படம் குறித்து கமல் பாராட்டுத் தெரிவித்தது மட்டுமல்லாமல், அடுத்தப் படத்தில் இந்த ரெக்கார்டை நீங்களே முறியடிக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in