`மத்திய அரசை திருடன் என்கிறார்'- கமலின் `பத்தலே பத்தலே' பாடலுக்கு எதிராக காவல் துறையில் புகார்

`மத்திய அரசை திருடன் என்கிறார்'- கமலின் `பத்தலே பத்தலே' பாடலுக்கு எதிராக காவல் துறையில் புகார்

நடிகர் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான `விக்ரம்' திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் எழுதி பாடிய `பத்தலே பத்தலே' பாடல் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த பாடல் வரிகளில் "பத்தலே பத்தலே" என்ற பாடலில் மத்திய அரசை தி௫டன் என்று கூறும் வகையில் அமைந்துள்ள "கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.. ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே... சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே" மற்றும் ஜாதிய ரீதியான பிரச்சினைகளை தூண்டும் வகையில் அமைந்துள்ள "குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு... ஊசி போடு மாமே வீங்கிடும் பம்பே" என்ற பாடல் வாிகள் அமைந்துள்ளது.

இந்த பாடலில் அமைந்துள்ள வரிகள் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையிலும், சாதி ரீதியான பிரச்சினைகளை தூண்டும் வகையிலும் அமைந்திருப்பதாகவும், எனவே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர் செல்வம் இணைய வாயிலாக காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.

மேலும் இந்த சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்க வேண்டும் புகாரில் குறிப்பிட்டுள்ள அவர், இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் விக்ரம் படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.