சாலை விபத்தில் ‘டார்ஸான்’ நடிகர் காயம்

சாலை விபத்தில் ‘டார்ஸான்’ நடிகர் காயம்
நடிகர் ஹேமந்த் பிர்ஜே

சாலை விபத்தில் பிரபல இந்தி நடிகர், தனது மனைவியுடன் காயம் அடைந்தார்.

பிரபல இந்தி நடிகர் ஹேமந்த் பிர்ஜே. இவர் 1985-ம் ஆண்டு வெளியான, ’அட்வெஞ்சர்ஸ் ஆப் டார்ஸான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து கமாண்டோ, ஆக் கே ஷோலே, ஜங்கிலி டார்ஸான், டார்ஸான் கி பேட்டி, மா கசம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் இவர், தனது மனைவியுடன் காரில் மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று சென்றுகொண்டிருந்தார். உர்சே டோல் அருகே கார் சென்றபோது சாலை தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. இதில் நடிகர் ஹேமந்தும் அவர் மனைவியும் காயமடைந்தனர். காரில் இருந்த அவர் மகள் காயமின்றித் தப்பினார்.

இதையடுத்து தலேகானில் உள்ள பவானா மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in