நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம்: புகைப்படத்தில் கரம் கோர்த்திருப்பவர் நடிகையா?

நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம்: புகைப்படத்தில் கரம் கோர்த்திருப்பவர் நடிகையா?

முகம் காட்டாமல் பெண்ணின் கையைக் கோர்த்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘மங்களகரமான தொடக்கங்களை நோக்கி’ என நடிகர் ஹரீஷ் கல்யாண் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை அமலாபால் தமிழில் அறிமுகமான 'சிந்து சமவெளி' திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். இதையடுத்து 'அரிது அரிது', 'பொறியாளன்', 'வில் அம்பு' போன்ற சில படங்களில் ஹீரோவாக நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பரபரப்பான ஹரீஷ் கல்யாண், இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரித்த 'பியர் பிரேமா காதல்' படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது சசியின் இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஹரீஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார்.

அதில், ஓர் பெண்ணின் கையைக் கோர்த்தபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘மங்களகரமான தொடக்கங்களை நோக்கி’ எனப் பதிவிட்டுள்ளார். இது அவரது திருமணம் குறித்த அறிவிப்பு என்ற அவரது பதிவின் கீழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் கரம் கோர்த்துள்ளவர் திரையுலகத்தைச் சேர்ந்தவரா, இல்லையா என்ற விவாதம் அவரது ரசிகர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஹரீஷ் கல்யாண் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in