`நான் உயிர் தப்ப அதுதான் காரணம்'- பிரபல காமெடி நடிகர் உருக்கம்

`நான் உயிர் தப்ப அதுதான் காரணம்'- பிரபல காமெடி நடிகர் உருக்கம்

கார் மீது லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பிரபல நடிகர் உயிர் தப்பினார்.

பிரபல மலையாள நடிகர் அஜய்குமார் என்ற கின்னஸ் பக்ரு. இவர் தமிழில், டிஷ்யூம், அற்புதத் தீவு, காவலன், 7ஆம் அறிவு, அறியான் படங்களில் நடித்துள்ளார். இவர் 'குட்டீம் கோலும்' என்ற மலையாள படத்தை இயக்கியுள்ளார். 'பேன்சி டிரெஸ்' என்ற மலையாளப் படத்தைத் தயாரித்தும் உள்ளார்.

சுமார் 30 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சின்னத்திரை தொடர்களிலும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு நேற்று காரில் சென்றுகொண்டிருந்தார். திருவில்லா புறவழிச் சாலையில் மாழுவன்காடுசிரா என்ற பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தது.

அப்போது, எதிரே லாரி ஒன்று வந்தது. முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து, கின்னஸ் பக்ரு கார் மீது திடீரென மோதியது. இந்த விபத்தில் பக்ரு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் சேதமடைந்தது. இந்த விபத்து தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் வேறொரு கார் மூலம் அவர் கொச்சி சென்றார்.

இந்த விபத்து குறித்து கின்னஸ் பக்ரு கூறும்போது, இந்த விபத்தில் சிறு காயம் கூட படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அதற்கு காரணம் சீட் பெல்ட் அணிந்ததுதான். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன். கடவுளுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.