திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் பிரபல நடிகர் அனுமதி

திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் பிரபல நடிகர் அனுமதி

நடிகரும் இயக்குநருமான ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபு, பல்லவி, ராம்குமார் நடித்த ’அறுவடை நாள்’ மூலம் இயக்குநர் ஆனவர் ஜி.எம்.குமார். தொடர்ந்து சத்யராஜ், ராதா நடித்த பிக்பாக்கெட், கார்த்திக், பல்லவி நடித்த இரும்பு பூக்கள், மோகன் பல்லவி நடித்த உருவம் ஆகிய படங்களை இயக்கினார்.

காலப் போக்கில், இயக்குநராக மட்டுமல்லாது நடிக்கவும் தொடங்கினார் ஜி.எம்.குமார். கேப்டன் மகள், வெயில், மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை, சரவணன் இருக்க பயமேன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஜி.எம்.குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை முகலிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in