'உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் நீங்கள் உணர்வீர்கள்': மஞ்சிமாவுடன் சேர்ந்து காதலை அறிவித்த நடிகர் கவுதம் கார்த்திக்

'உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் நீங்கள் உணர்வீர்கள்': மஞ்சிமாவுடன் சேர்ந்து காதலை அறிவித்த நடிகர் கவுதம் கார்த்திக்

கடந்த சில மாதங்களாக தங்களைச் சுற்றி வந்த செய்தியை, உண்மை தான் நாங்கள் காதலிக்கிறோம் என்று நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகன் இணைந்து அறிவித்துள்ளனர்.

நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்திக் இயக்குநர் மணிரத்னத்தின் 'கடல்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ' ரங்கூன்;, 'இவன் தந்திரன்', 'தேவராட்டம் ' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல', ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் பொன்குமார் இயக்கத்தில் ‘ஆகஸ்ட் 16 - 1947' ஆகிய படத்திலும் நடித்து வருகிறார்.

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், தமிழில் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் அறிமுகமானார். நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து 'தேவராட்டம்' படத்தில் இணைந்து நடித்தார். அப்போது நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கோலிவுட்டில் செய்தி பரவியது.

இந்த நிலையில், தங்கள் காதலை அவர்கள் இருவரும் சேர்ந்து அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் பகிர்ந்துள்ளனர்.

இகுறித்த பதிவில் மஞ்சிமா மோகன் , "மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்துபோன போது நீ ஒரு காவலனாய் என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய். நீ எப்போதும் எல்லாவற்றிலும் என்னுடைய ஃபேவரட்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கவுதம் கார்த்திக் தனது பதிவில் , "சரியான நபர் உங்கள் வாழ்வில் வந்தால் என்ன நடக்கும்? பெரும்பாலானவர்கள் சொல்வார்கள், நீங்கள் அவர்கள் மீது உங்கள் கண்களை வைத்த நொடியில் நீங்கள் அன்பினால் நிறைந்திருப்பீர்கள், உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் நீங்கள் உணர்வீர்கள் என்று. அது இப்போது என் வாழ்வில் நடந்திருக்கிறது. மஞ்சிமா மோகன், நீ நமக்குள் ஏற்படுத்திய உறவை விவரிக்க 'காதல்' என்ற வார்த்தை கூட போதுமானதாக இருக்காது. ஐ லவ் யூ" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in