நடிகர் கவுதம் கார்த்திக்-நடிகை மஞ்சிமா டும் டும் டும்: சென்னையில் நவ.28-ல் நடக்கிறது

நடிகர் கவுதம் கார்த்திக்-நடிகை மஞ்சிமா டும் டும் டும்: சென்னையில் நவ.28-ல் நடக்கிறது

நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் சென்னையில் நவ.28-ல் திருமணம் நடைபெற உள்ளது.

நடிகர் முத்துராமனின் மகனான நடிகர் கவுதம் கார்த்திக், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'இவன் தந்திரன்', 'ரங்கூன்', 'மிஸ்டர் சந்திரமவுலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் 'அச்சம் என்பது மடமையடா', 'துக்ளக் தர்பார்', 'எப்.ஐ.ஆர்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் 'தேவராட்டம்' படத்தில் ஜோடியாக நடித்த போது அவர்களிடையே காதல் மலர்ந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தங்கள் இருவரும் காதலிப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் தேதி முடிவாகியுள்ளது. இவர்களது திருமணம் சென்னையில் நவ.28-ம் தேதி நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். இதன்பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திரை பிரபலங்களை அழைத்து நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in