சோகம்... நடிகர் பெப்சி விஜயன் தாயார் காலமானார்!

பெப்சி விஜயன்
பெப்சி விஜயன்

நடிகர், ஸ்டன்ட் மாஸ்டர் பெப்சி விஜயனின் தாயார் காலமானார். நடிகர் பெப்ஸி விஜயனின் தாயார் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 கோகிலா
கோகிலா

காலம் சென்ற ஸ்டண்ட் மாஸ்டர் சாமிநாதனின் மனைவியும், பெப்சி அமைப்பின் முன்னாள் தலைவரும், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவருமான பெப்சி விஜயனின் தாயார் கோகிலா (87) உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

திருமதி கோகிலாவின் இறுதி சடங்குகள் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. இவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்தப் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பெப்சி விஜயன்
பெப்சி விஜயன்

’மீண்டும் கோகிலா’ படம் மூலம் ஸ்டன்ட் மாஸ்டராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் பெப்சி விஜயன். இவரது தந்தை மாஸ்டர் சாமிநாதன் நடிகர் எம்.ஜி.ஆர்ரின் பலப் படங்களில் ஸ்டன்ட் கோரியோகிராஃபராகப் பணியாற்றியவர். குறிப்பாக, ‘அடிமைப் பெண்’ படத்தில் வரும் புலி சண்டைக்காக இவர் பிரபலமானார். இதனால், எம்.ஜி.ஆர்ரின் நன்மதிப்பை பெற்றார் மாஸ்ட்ர் சாமிநாதன். தந்தை வழியை ஒட்டியே விஜயனும் ஸ்டன்ட் மாஸ்டராகத் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு நடிகராக ‘தில்’, ‘பாபா’, ‘வில்லன்’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்டப் பல படங்களில் இவர் நடித்தார். ‘தில்’ படத்தில் மச்சான் மீச விச்சருவா பாடலில் இவர் பிரபலமடைந்தார். சமீபத்தில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் இவரது டேய்...டேய்...டேய் காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in