ஆசையைச் சொன்ன அனுராக் காஷ்யப்... அப்படியே செய்த லோகேஷ் கனகராஜ்!

அனுராக் காஷ்யப்புடன், லோகேஷ் கனகராஜ்.
அனுராக் காஷ்யப்புடன், லோகேஷ் கனகராஜ்.

லோகேஷ் படத்தில் சாகவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்திய பிரபல நடிகரின் ஆசையை லோகேஷ் கனகராஜ் நிறைவேற்றியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'லியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக அனைத்து மொழிகளிலும் நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளது. சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் பலர் படத்தில் இருந்தும் அவர்களுடைய கதாபாத்திரத்தை லோகேஷ் முழுமையாக பயன்படுத்தவில்லை என விமர்சனமும் எழுந்து வருகிறது.

அப்படியான ஒரு கதாபாத்திரம் தான் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப்பின் கதாபாத்திரம். இவர் படத்தில் நடிகர் விஜய்யின் நண்பனாக வருகிறார்.

லியோ- அனுராக் காஷ்யப்
லியோ- அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்பை படத்தில் 20 விநாடிகளில் போட்டுத்தள்ளி இருக்கிறார் லோகேஷ். இதைத்தான் ரசிகர்கள் தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர். ஏனெனில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அனுராக் காஷ்யப் அளித்த ஒரு பேட்டியில், 'நான் செத்தால் அது லோகேஷ் படத்தில் தான் சாக வேண்டும்' எனக் கூறியிருந்தார். அவர் ஆசைப்பட்டபடியே 'லியோ' படத்தில் அவரது கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் சாகடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in