மீண்டும் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ்! வைரலாகும் புதிய லுக்!

மீண்டும் இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ‘அட்டக்கத்தி’ தினேஷ்!
மீண்டும் இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ‘அட்டக்கத்தி’ தினேஷ்!

இயக்குநர் பா இரஞ்சித் இயக்கத்தில் ’அட்டகத்தி’ திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தினேஷ். ’அட்டகத்தி’ படத்தின் வெற்றியால் அந்தப்படத்தின் பெயர் அவர் பின்னால் ஒட்டிக்கொண்டது. தற்போது இவர் மீண்டும் இயக்குநர் பா. இரஞ்சித் படத்தில் நடிக்கவுள்ளார்.


’அட்டக்கத்தி’, ‘விசாரணை’, ’குக்கூ’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் தினேஷ் தற்போது, ’ஜே பேபி’, ’தண்டாகாரன்யம்’ படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும், ’கருப்பு பல்ஸர்’, ’லப்பர் பந்து’ படங்களின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியாக, இயக்குநர் பா இரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் இணைகிறார் நடிகர் தினேஷ். இந்த படத்திற்காக மிக வித்தியாசமான கெட்டப்பில் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். அவரது இந்த புதிய லுக் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in